சிறுவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்தோனேசிய ஜனாதிபதி அனுமதி

311
சிறுவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்தோனேசிய ஜனாதிபதி அனுமதி:-

சிறுவர் பாலியல் வன்முறையில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க இந்தோனேசிய ஜனாதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
அண்மையில் 14 வயது சிறுமி பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டமை உள்ளிட்ட சில சம்பவங்களைத் தொடர்ந்து கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதுவரையில் சிறுவர் அல்லது வளர்ந்தவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைக்கு உச்சபட்சமாக 14 ஆண்டு சிறைத்தண்டனையே விதிக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டு சிறைத்தண்டனை அனுபவித்து விடுதலையாவோர் மீது இலத்திரனியல் சாதனமொன்று பொருத்தப்பட்டு அவர்கள் கண்காணிக்கப்பட உள்ளனர்.
அண்மையில் யுவான் என்ற சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தோனேசியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE