அனர்த்த சேதங்களை வரையறுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் – மஹிந்த ராஜபக்ஸ

290
அனர்த்த சேதங்களை வரையறுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிருக்க வேண்டும் - மஹிந்த ராஜபக்ஸ:-

அனர்த்த சேதங்களை வரையறுக்க அரசாங்கம் கவனம் செலுத்தியிக்க வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்றைய தினம் உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனர்த்தம் தொடர்பில் முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தால் சேத அழிவுகளை மட்டுப்படுத்தியிருக்கலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
அனர்த்த நிலைமைகள் குறித்து அரசாங்கத்தை விமர்சனம் செய்யவில்லை என்ற போதிலும் சில குறைபாடுகளை சுட்டிக்காட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றுவதற்கு கட்சி நிற பேதங்களை பார்க்க வேண்டியதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட இடங்களுக்கு ஆளும் கட்சியினரும் எதிர்க்கட்சியினரும் சென்றதாகத் தெரிவித்துள்ளார்.
அரசியல் லாபம் ஈட்டும் நோக்கில் இந்தப் பணிகளை மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க ஊழியர்கள் மீது அரசாங்கம் நம்பிக்கை கொள்ள வேண்டுமெனவும், சில தீர்மானங்களை எடுப்பதற்கு அவர்கள் அஞ்சுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE