டெல்லியில் 13 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு.மருத்துவமனையில் உயிருக்கு போராட்டம்

273

rape-pregnant-girl

இந்தியாவின் தலைநகரான டெல்லியில் 13 வயதுடைய சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு எய்ம்ஸ் மருத்துவனையில் உயிருக்கு போராடி வரும் சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் திகதி நிர்பயா என்னும் இளம் பெண் ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

இந்நிலையில் டெல்லியில் 13 வயதுடைய சிறுமி மிருகத்தனமாக பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு ரயில்வே தடத்தில் போடப்பட்டுள்ளார்.

தற்போது, குறித்த சிறுமி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் உயிருக்கு போராடி வரும் நிலையில், மருத்துவர்கள் சிறுமிக்கு தீவர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Delhi Commission for Women (DCW) தலைமை அதிகாரி Swati Maliwal பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனையில் சந்தித்துள்ளார்.

பொலிஸ் அளித்துள்ள தகவல்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுமியின் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் வெட்டு காயங்கள் காணப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், தற்போது வரை சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

SHARE