பொலிஸ் பைக்கில் ஜாலியாக சுற்றிய குட்டி இளவரசர்

245

பிரித்தானியாவின் குட்டி இளவரசர் ஜார்ஜ் பெருநகர பொலிஸ் அதிகாரியின் மோட்டர் பைக்கில் ஜாலியாக ஏறி அமர்ந்திருப்பது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

இளவரசி ஆனி கப்பற்படையின் தேசிய அருங்காட்சியத்திற்கு வந்திருந்தார். இதற்காக இளவரசி கேட், இளவரசர் வில்லியம் மற்றும் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அருங்காட்சியகத்திற்கு வந்த வேலையை முடித்த இளவரசி ஆனிகென்சிங்டன் அரண்மனையில் இருந்து ஹெலிகொப்டரில் கிளம்பினார்.

இதன் பிறகு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெருநகர பொலிஸ்அதிகாரியின் மோட்டர் பைக்கில் குட்டி இளவரசர் ஜார்ஜ் ஜாலியாக ஏறி அமர்ந்தார். இதனை மகிழ்ச்சியுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார் இளவரசி கேட்.

அப்போது குட்டி இளவரசர் ஜார்ஜ் கப்பற்படை சீருடை போன்ற உடை அணிந்திருந்தார்.

கடந்த 1987ம் ஆண்டு அதாவது 29 ஆண்டுகளுக்கு முன்பே இளவரசர் ஹாரி மற்றும் வில்லியம் ஆகியோர் கப்பற்படை சீருடை அணிந்து பொலிஸ் பைக்கில் ஏறி “சல்யூட்” போட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE