
அநேக நாடுகளுக்கு இடையேயான தீவிரவாதம் தற்சமயம் அதிகரித்து வருகிறது என்பது நாம் அறிந்த உண்மை. அதிலும், வேறு நாட்டில் இருந்து குடியேறியவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். மேலைநாடுகளில், முக்கியமாக முஸ்லிம்களாக இருந்தால் அதிகளவில் பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும்.மொரோக்கோவில் பிறந்த நஜாத் பெல்காசெம், குடியேறியவர்களும் மதிப்புள்ளவர்கள்தான். அவர்களை அலட்சியப்படுத்துவது தவறு என நிரூபித்துள்ளார்.
மொரோக்கோவில் 7 பேரில் இரண்டாவது மகளாக பிறந்தார் நஜாட். இவரது தந்தை ஒரு கட்டடம் கட்டும் தொழிலாளி . இவர் 1982ஆம் ஆண்டு ஃப்ரான்ஸிற்குக் குடிபெயர்ந்தார்.அதற்கு முன் தன் வீட்டில் உள்ள ஆடுகளை மேய்க்கும் சிறுமியாக இருந்த இவர் குடிபெயர்ந்த பின் Paris Institute of Political Studiesல் படித்து 2002ஆம் ஆண்டு பட்டதாரியானார். பிறகு, அதே ஆண்டு French Socialist Partyல் இணைந்தார். முதல்முறையாக 2004-ல் ரோனே ஆல்ப்ஸ் பிரதேச சபையில் ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
2007ல் Segolene Royal என்னும் முன்னாள் ஜனாதிபதியின் செய்தி தொடர்பாளராக இருந்தார். பிறகு, 2012ல் ஹோலண்ட் என்னும் ஜனாதிபதிக்கு செய்தி தொடர்பாளராக இருந்தார். அந்த ஆண்டு ஹோலண்ட் பதவி ஏற்றதும், நஜாத் பெண்கள் உரிமைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளராக நியமிக்கப்பட்டார். மேல்ஜ்ம், அதே ஆண்டு செப்டம்பரில் ஓரினச் சேர்க்கைக்கு எதிராக போராட்டம் செய்யும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
2014ல் பெண்கள் உரிமை, நகர மேம்பாடு மற்றும் இளைஞர்கள் விளையாட்டுத்துறை ஆகியவற்றின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். மேலும், தேசிய கல்வி, உயர்கல்வி மற்றும் ஆய்வின் அமைச்சர் பெனியாட் ஹேமோனை தோற்கடித்து பதவிக்கு வந்தார். இவர்தான் ஃப்ரான்ஸில் அரசு அலுவலகத்தில் பணியாற்றும் முதல் இளைய முஸ்லிம் பெண் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.தற்போது ஃப்ரான்ஸின் கல்வி அமைச்சராக வளர்ந்திருக்கிறார் நஜாட்.
மனதில் தீராக்காதலுடன் செய்யும் எந்தவொரு வேலையும் நம்மை மேன்மையடையச் செய்யும். சாதிக்க மதம், இனம், மொழி, பாலினம் ஆகியவை தேவையில்லை. மனதில் உறுதி இருந்தால் போதும் என நிரூபித்துள்ளார்.