ஐபிஎல் தொடரில் வெற்றி கொண்டாட்டத்தின் போது முகத்தில் காயம் ஏற்படுத்தியதற்காக பெங்களூர் வீரர் யூஸ்வெண்டிரா சாஹல் டிவில்லியர்ஸிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த “பிளே-ஆப்” சுற்றில் குஜராத் அணியை வீழ்த்திய பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
பெங்களூர் அணி தொடக்கத்திலே முக்கிய விக்கெட்டுகளை தவறவிட்டது. இதன் பிறகு டிவில்லியர்ஸ் (79 ஓட்டங்கள்) அதிரடி காட்ட 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்ற பெங்களூர் அணி இறுதிப் போட்டிக்கு நுழைந்தது.
இந்நிலையில் மைதானத்திற்கு ஓடி வந்த பெங்களூர் வீரர்கள் சாஹல் மற்றும் சர்பிராஸ் கான் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் டிவில்லியர்ஸ் மேல் ஏறி குதித்தனர். இதில் ஹெல்மெட்டால் டிவில்லியர்ஸின் தாடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது.
இதனால் டுவிட்டரில் டிவில்லியர்ஸிடம் மன்னிப்பு கேட்ட சாஹல், அணியை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றதற்கு நன்றியும் தெரிவித்துக் கொண்டார்.