ஜனாதிபதி மைத்திரிக்கு ஜப்பானில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பு…!

233

ஜப்பான் நகோயா சர்வதேச விமான நிலையத்தை இன்று சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் தூதுக்குழுவினரையும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர் யோஜி முத்தோ, மாவட்ட ஆளுநர் ஹிதேகி ஓமோசா உள்ளிட்ட அந்நாட்டு தூதுக்குழுவினரால் வரவேற்கப்பட்டனர்.

இதன் பின்னர் ஜனாதிபதிக்கு நயோகா ஹில்டன் ஹோட்டலில் சம்பிரதாய பூர்வமான வரவேற்பளிக்கப்பட்டது.

அத்தோடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வியட்நாம் பிரதமரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

இதன்போது, ஜீ 7 மாநாட்டில் கலந்துரையாடப்படவுள்ள நிரந்தர சமாதானம் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு சௌபாக்கியம் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படவுள்ளது.

இதனையடுத்து, ஜப்பானின் வெளிநாட்டு அமைப்புகளின் வர்த்தக அமைப்பின் தலைவர் மற்றும் ஒனோமிச்சி டொக்யார்ட் நிறுவனத்தின் தலைவர் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார் என்றும் ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

ஜப்பானில் நடைபெறும் ஜீ 7 மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி இலங்கை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து நேற்று ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.msms01ms02ms03

SHARE