ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முடியாது

219
ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முடியாது – கிரியல்ல:-

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த முடியாது என அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் முரண்பாட்டை ஏற்படுத்த சில தரப்பினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

இரு தலைவர்களுக்கும் இடையிலான புரிந்துணர்வின் அடிப்படையில் இந்த தேசிய அரசாங்கம் உருவாக்கப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.

நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை எட்ட வேறும் சந்தர்ப்பங்கள் கிடைக்காது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, தேசிய இனப்பிரச்சினைக்கு உரிய தீர்வுத் திட்டமொன்றை எட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

SHARE