ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தோனேஷிய ஜனாதிபதிக்கு இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை..!!

226
presi-1ஜீ_7 அரச தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், இந்தோனேஷியா ஜனாதிபதி ஜொகோ விடோடோவுக்கும் (Joko Vidodo) இடையில் இருதரப்பு பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை ஜப்பானின் நகோயா நகரில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இலங்கைக்கும், இந்தோனேஷியாவுக்கும் இடையிலான தொடர்புகளை மேலும் விஸ்தரிப்பதற்கு இதன்போது இரண்டு தலைவர்களுக்கும் இடையில் இணக்கம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான விமானப் போக்குவரத்துகளை அதிகரிப்பது குறித்தும் இந்த சத்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும் பொருளாதார மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பில் இலங்கை – இந்தோனேஷிய தலைவர்களிடையே கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையின் இறப்பர் உற்பத்திக்கு சர்வதேச சந்தையில் சிறந்த விலையைப் பெற்றுக்கொள்வது குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது தெளிவுபடுத்தியுள்ளதுடன், அதன் பொருட்டு எதிர்காலத்தில் பொது இணக்கப்பாட்டின் அடிப்படையில் செயற்படுவது தொடர்பில் இரண்டு நாடுகளினதும் தலைவர்களும் கவனம்செலுத்தியுள்ளனர்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளுடன் இலங்கை சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது போன்று, எதிர்காலத்தில் சீனா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடனும் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக்கொள்ள எண்ணியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தோனேஷிய ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதுதவிர ஜப்பானில் மேலும் சில அரச தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்களை ஜனாதிபதி நேற்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

SHARE