இதையடுத்து அருண் தனது மனைவியை பேளூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், குழந்தை அதிக பருமனாக இருப்பதாகவும், அறுவை சிகிச்சை செய்து தான் குழந்தையை வெளியே எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.
அதன்படி நேற்று முன்தினம் இரவு, டாக்டர்கள் நந்தினிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். அப்போது அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை 6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு, கொழுவென்று இருந்தது.
இதுகுறித்து நந்தினிக்கு பிரசவம் பார்த்த டாக்டர் ஜெகதீஷ் கூறுகையில், இந்தியாவிலேயே அதிக எடையுடன் பிறந்த குழந்தை இது தான். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மராட்டியத்தில் 6 கிலோ எடையில் குழந்தை பிறந்திருந்தது. இந்த குழந்தை அதிக எடையுடன் இருந்தாலும், நல்ல ஆரோக்கியமாக உள்ளது. தாயும், சேயும் நலமாக உள்ளனர் என்றார்.
6 கிலோ 800 கிராம் எடையுடன் கொழு, கொழுவென பிறந்த இந்த அதிசய குழந்தையை உறவினர்கள் மட்டுமின்றி, மருத்துவமனையில் உள்ளவர்களும் ஆச்சரியமாக பார்த்து செல்கிறார்கள்.