ஐபிஎல் போட்டியின் ஆரம்ப ஆட்டம் முதல் அசத்தி வந்த கொல்கத்தா அணி நேற்று நடையை கட்டியது.
கொல்கத்தா அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 140 ஓட்டங்களே எடுத்தது. இதனால் 22 ஓட்டங்களால் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
கொல்கத்தா அணி தோற்றுவிட்டதால், அவ்வணியின் சீயர் கேர்ள்ஸ் இருவர் கண்ணீர் சிந்திய காட்சியை அந்த அணியின் உரிமையாளரும் நடிகருமான ஷாரூக்கான் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
கொல்கத்தா அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட இவர்களுக்கான சம்பளம் ஒரு போட்டிக்கு 6000 முதல் 12000 வரை ஆகும்.
அவர்களின் அணி போட்டியை வென்றால் 3000 ரூபாய் போனஸ்.நேற்றைய தோல்வியால் அவர்களுக்கு போனஸ் கிடைக்காது என்றாலும், அவர்கள் அணி தோல்வியுற்றதால் அப்பெண்கள் சிந்திய கண்ணீரால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகின் அன்பை பெற்றுவிட்டனர் என்றுதான் சொல்ல வேண்டும்.
இவர்கள் கண்ணீர் சிந்திய புகைப்படத்தைகொல்கத்தா அணியின் உரிமையாளர் ஷாரூக்கான் தனதுடுவிட்டர் பக்கத்தில், “லவ்யூ” என்றுகூறி நன்றி தெரிவித்துள்ளார்.