கொல்கத்தா “அவுட்”: ஆதங்கத்தை கொட்டி தீர்த்த கவுதம் கம்பீர்

263

625.117.560.350.160.300.053.800.210.160.90 (8)

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 2 முறை சாம்பியனான கொல்கத்தா அணி இந்த முறை “பிளே-ஆப்” சுற்றில் ஐதராபாத்திடம் தோற்று வெளியேறியது.

நேற்று முன் தினம் டெல்லியில் நடந்த இந்தப் போட்டியில் கொல்கத்தா அணிக்கு வெற்றி வாய்ப்பு இருந்தும் 22 ஓட்டங்களால் ஐதராபாத் அணியிடம் வீழ்ந்தது.

இதனால் 2வது தகுதி சுற்றுக்கு முன்னேறிய ஐதராபாத் அணி, இறுதிப் போட்டிக்கான ஆட்டத்தில் குஜராத் அணியை இன்று சந்திக்கிறது.

இந்நிலையில் தோல்வி குறித்து பேசிய கொல்கத்தா அணித்தலைவர் கவுதம் கம்பீர், பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்ட போதிலும், துடுப்பாட்ட வீரர்கள் சொதப்பிவிட்டதாக புலம்பியுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், “163 ஓட்டங்கள் இலக்கு என்பது இந்த ஆடுகளத்தில் எடுக்க கூடியது தான். துடுப்பாட்ட வீரர்களின் மோசமான ஆட்டத்தால் தோல்வி ஏற்பட்டது.

எந்த ஒரு வீரராவது 60 அல்லது 70 ஓட்டங்கள் எடுத்து களத்தில் நிலைத்து நின்றிருந்தால் நாங்கள் வெற்றி பெற்று இருப்போம்.

யுவராஜ் சிங் நம்ப முடியாத வகையில் சிறப்பாக ஆடினார். அவரை போன்று யாராவது சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

SHARE