இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசெல்ஸ் அறிவிப்பு.

237
இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசெல்ஸ் அறிவிப்பு - குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கொழும்பு:-

இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசெல்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
பல்வேறு துறைகளில் நிலவி வரும் சவால்களை வெற்றிகொள்ள இலங்கையுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக சீசேல்ஸின் சமூக விவகார, சமூக அபிவிருத்தி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஏinஉநவெ ஆநசவைழn  தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்வது இரு நாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் மீன்பிடித்துறைக்கும் சுற்றுச்சூழல் துறைக்கும் இலங்கை அரசாங்கம் வழங்கிய உதவிகள் பாராட்டுக்குரியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விளையாட்டுத்துறை விவகாரங்களிலும் இலங்கையுடன் உறவுகளை மேம்படுத்திக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE