இரத்தினபுரி மாவட்டம் பலாங்கொட ஜெயிலானி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கான சின்னம் சூட்டலும் பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார். இவருடன் கல்வி அதிகாரிகள், அரசியல் பிரமுகர்கள், புத்திஜீவிகள், பெற்றோர்கள் கலந்துகொண்டார்கள்.
இதன் போது பாடசாலையில் கற்றலில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள், பல்கலைகழகத்திற்கு தெரிவான மாணவர்கள், இணை பாடவிதான செயற்பாடுகளில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்கள் உட்பட இதற்கு காரணமான ஆசிரியர்கள் அதிபரும் கௌரவிக்கப்பட்டு நினைவு சின்னங்களும் வழங்கப்பட்டன.