வடக்கு, கிழக்கில் உருக்கு வீடுகளுக்கு நிபுணர் குழு அங்கீகாரம்

264

வடக்கு கிழக்கு மாகாணங்களில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 65 ஆயிரம் பூர்த்தி செய்யப்பட்ட உருக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு நிபுணர் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பேராதனைப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிவில் பொறியியல் திணைக்களத்தின் உறுப்பினர்களை உள்ளடக்கிய இக்குழுவானது, யாழ்ப்பாணத்தில் நிர்மாணிக்கப்பட்டிருந்த இரண்டு மாதிரி வீடுகளை ஆராய்ந்திருந்தது.

அதன்பின்னர் அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு யுத்தத்தால் இடம்பெயர்ந்தவர்களின் அவசர தேவையாக இந்த வீடமைப்புத் திட்டம் இருப்பதை சுட்டிக்காட்டுவதற்கு அப்பால் நிர்மாணப்பொருட்களின் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக அந்தக் குழு கூறியுள்ளது.

பல்வேறு காரணங்களால் இந்த வீடமைப்புத் திட்டம் சர்ச்சைக்குரியதாக காணப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சில பிரிவுகள் ஜே.வி.பி மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த உத்தேச உருக்கு வீடுகளின் செலவீனம் பொருத்தமற்ற தன்மை தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசனை மேற்கொள்ளப்படாமை போன்றவற்றின் அடிப்படையில் கடும் எதிர்ப்பை வெளியிட்டுவருகின்றனர்.

இந்த உருக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான முகவர் அமைப்பாக ஆர்சிலோர் மிட்டாலை அரசாங்கம் தெரிவுசெய்தபோதிலும், அந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கு முன்னர் அதன் சாதக பாதக தன்மைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் உன்னிப்பாக ஆராய்வார்கள் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.

அதேவேளை புனர்வாழ்வு, மீள்குடியேற்ற அமைச்சு இந்த திட்டம் தொடர்பாக சுயாதீன மதிப்பீட்டை மேற்கொள்வதற்காக பல்கலைக்கழகத்தை அணுகியிருந்தது.

இந்நிலையில் குறித்த குழு இந்த மாத முற்பகுதியில் அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

உத்தேச வீடுகளின் தற்போதுள்ள வடிவமைப்பில் சில முன்னேற்றங்களுக்கு அக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.house

SHARE