நடனமாடி சிறுமியை மடக்கியவர் மாட்டினார்

234

pole-dance

திருமண வைபவமொன்றில் நடனமாடிய சிறுமியுடன் நடனமாடி அச்சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியதாக கூறப்படும் பாதுகாப்பு படையைச்சேர்ந்தவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

காஹாதுடு வெனிவெல்கொல என்ற கிராமத்தைச் சேர்ந்த சிறுமியையே அந்த படைவீரர், இவ்வாறு ஏமாற்றி அழைத்துச்சென்று குடும்பம் நடத்தியுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட படைவீரர், திருமணம் முடித்தவர் என்று அச்சிறுமியுடன் மூன்றுமாதங்கள் குடும்பம் நடத்தியுள்ளார் என்றும் அறியமுடிகின்றது.

சிறுமியை கஹாதுடுவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக தெரிவித்த பொலிஸார், கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.pole-dance

 

SHARE