
பொது மன்னிப்புக் காலத்தில் 7645 படையினர் இராணுவத்திலிருந்து விலகிக் கொண்டுள்ளனர். உரிய முறையில் விடுமுறை எடுக்காது இராணுவ சேவைக்கு சமூகமளிக்காத படையினர் முறையாக விலகிக் கொள்ள இந்த சந்தா்ப்பம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பொதுமன்னிப்புக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு முறையாக விலகிக் கொள்ளாத 7645 பேர் விலகிக் கொண்டுள்ளனர்.
இராணுவத்தைச் சேர்ந்த 7415 பேரும், கடற்படையைச் சேர்ந்த 417 பேரும், விமானப்படையின் 313 பேரும் விலகிக் கொண்டுள்ளனர்.இந்தப் பொது மன்னிப்புக் காலம் எதிர்வரும் ஜூலை மாதம் 12ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.