மரண அச்சுறுத்தல் தொடர்கின்றது இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண்டாம் – கோதபாய

253
மரண அச்சுறுத்தல் தொடர்கின்றது இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண்டாம் - கோதபாய

மரண அச்சுறுத்தல் தொடர்கின்றதாகவும் இதனால் இராணுவப் பாதுகாப்பினை அகற்ற வேண்டாம் எனவும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ கோரியுள்ளார்.
தாம் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நிலவிய அச்சுறுத்தல்கள் இன்னும் அதேவாறு தொடர்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு உயர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கு விசாரணை ஒன்றில் சாட்சியமளிக்க சென்றிருந்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளை இல்லாதொழிப்பதற்கு பாதுகாப்புச் செயலாளர் என்ற ரீதியில் தாம் சிறந்த சேவைகளை வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இராணுவப் பாதுகாப்பினை நீக்கி காவல்துறைப் பாதுகாப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதாகவும் அவ்வாறு பாதுகாப்பினை நீக்க வேண்டாம் எனவும் அவர் கோரியுள்ளார்.
எதிர்வரும் காலங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைப் பதவியை ஏற்றுக் கொள்ளும் திட்டமில்லை எனவும் அவ்வாறு தமக்கு இதுவரையில் உத்தியோகபூர்வமாக எவரும் அழைப்பு விடுக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

SHARE