நாமலுக்கு அழைப்பாணை! கைதுசெய்யப்படுவாரா?

234

இன்று செவ்வாய்க்கிழமை காலை, நாமல் ராஜபக்ஷவை, , பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் பொலிஸ் நிதிக்குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகுமாறு, அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

அவருக்குச் சொந்தமான சட்ட நிறுவனம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த சட்ட நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிமாற்றங்கள் தொடர்பிலும் அவரிடம் வாக்குமூலம் பெறப்படும் என்று குறித்த பிரிவினரின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் விசாரணைகளின் பின் இவர் கைச்செய்யப்படுவாரா என்பது கேள்விக்குறியாகும்….

SHARE