அரசியல் அமைப்பு குறித்து இறுதி இணக்கப்பாடு விரைவில்! பிரதமர்

255

எதிர்வரும் இரண்டு மாதங்களில் அரசியல் அமைப்பு குறித்த வரைவுத் திட்டத்தை உருவாக்குவது தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டை எட்ட முடியும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைச்சர்களுடன் நடத்திய சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், புதிய அரசியல் அமைப்பினை உருவாக்குவதில் பிரதான அரசியல் கட்சிகள் இரண்டுக்கும் இடையில் ஒருமித்த காரணிகள் காணப்படுகின்றன.

உத்தேச அரசியல் அமைப்பு திருத்தங்கள் தொடர்பில் பிரதான இரண்டு கட்சிகளுக்கும் எதிர்வரும் இரண்டு மாதங்களில் பொது இணக்கப்பாட்டை எட்ட முடியும் என தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை பிரதமர் அமைச்சர்களுக்கு விளக்கியுள்ளார்.

ranil-Wickramasinghe

SHARE