கல்யாணம் முதல் காதல் வரை ஹிந்தி சீரியல் நாயகிக்கு திருமணம் (புகைப்படம்)

265

கல்யாணம் முதல் காதல் வரை ஹிந்தி சீரியல் நாயகிக்கு திருமணம் (புகைப்படம்) - Cineulagam

Yeh Hai Mohabbatein’s என்ற ஹிந்தி நாடகத்தின் நாயகி திவ்யங்கா திரிபதிக்கு இன்று திருமணம் (ஜுலை 8). சீரியல்களில் நடித்துவரும் இவர் விவேக் தஹியா என்பவரை காதலித்திருக்கிறார். இவரும் பல சீரியல்களில் நடித்திருக்கிறார்.

இவர்களது காதலுக்கு பெற்றோர்களிடம் இருந்து பச்சை கொடி கிடைக்க கடந்த ஜனவரி மாதம் 17ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

இதனை தொடர்ந்து தற்போது இவர்களது திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சூழ நடைபெற்றுள்ளது. திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சி ஜுலை 10ம் தேதி நடக்க இருக்கிறது.

இந்த சீரியலின் தமிழ் ரீமேக் தான் கல்யாணம் முதல் காதல் வரை தொடர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE