பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்று முக்கிய பேச்சுவார்த்தை

259

Nimal-Siripala-de-Silva1

பஸ் கட்டணத் திருத்தம் தொடர்பில் இன்றைய தினம் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் போக்குவரத்து அமைச்சில் இன்றைய தினம் முற்பகல் 10.00 மணிக்கு இந்த விசேட பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

பஸ் சங்கங்களின் பிரதிநிதிகள் அமைச்சின் அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்க உள்ளனர்.

3.2 வீதத்தினால் பஸ் கட்டணங்களை உயர்த்துவதற்கு போக்குவரத்துஅமைச்சு இணங்கியிருந்தது.

எனினும் இதனை பஸ் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
இதனைத் தொடர்ந்தே இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட உள்ளன.

குறைந்தபட்ச கட்டணத்தை 10 ரூபாவாகவும் பஸ் கட்டணத்தை 15 முதல் 15 வீதத்தினால் உயர்த்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

SHARE