ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ் ரவ் இந்தவார இறுதியில் ஸ்ரீலங்காவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்காவிற்கான விஜயத்தின் போது கொழும்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய ரஷ்ய தூதரகத்தையும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் திறந்து வைக்கவுள்ளார்.
ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி லவ் ரவ் சிங்கள மொழியிலும் பேசக்கூடியவர் எனவும் கடந்த 2009 ஆம் ஆண்டு ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்தமை குறிப்பிடத்தக்கது.