அழிப்பதற்காக இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்த ரூபாய் 24 லட்சம் பெறுமதியான 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்களை திருடிய அதன் சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த நபர் மத்திய வங்கியின் நாணய மாற்று பிரிவில் சேவையில் ஈடுபட்டுள்ளவர் என தெரியவந்துள்ளது.
அவர் நேற்று கொழும்பு, கோட்டை மேலதிக நீதவான் லங்கா ஜயரத்ன முன் முன்னிலைப்படுத்தி போது இந்த மாதம் 22 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
குறித்த 5 ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் தொகை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதுடன், சந்தேக நபர் வேறு நிதி மோசடியில் தொடர்பட்டுள்ளாரா என தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.