நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு

266

ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஸவை ஜூலை 18 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் லங்கா ஜயரட்ண நாமல் ராஜபக்சவை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

2013ம் ஆண்டு ரக்பி விளையாட்டுப் போட்டி ஒன்றினை ஒழுங்கு செய்த க்ரீஸ் என்ற நிறுவனம் நாமல் ராஜபக்சவிற்கு வழங்கியதாக கூறப்படும் எழுபது மில்லியன் ரூபா பணம் வேறொரு வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டது.

இந்நிலையில் குறித்த நிதியை முறைகேடாக பயன்படுத்தினார் என்னும் குற்றச்சாட்டிலும், பணச்சலவை சட்டத்தின் கீழ் இன்றைய தினம் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நாமல் ராஜபக்சவை கைது செய்தனர்.

யாரை கைது செய்ய வேண்டும் என்று நல்லாட்சி அரசாங்க அமைச்சர்களே தீர்மானிப்பார்கள் எனவும், சட்டத்தை தத்தமது கைகளில் பெற்றுக் கொள்வதே நல்லாட்சி அரசாங்கம் எனவும், மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான எங்களது போராட்டத்தை ஒரு நாளும் நாம் நிறுத்த மாட்டோம் என்றும், நாமல் நேற்றைய தினம் முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

4547415994_1293b87915

 

SHARE