15 அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படும் – பிரதமர்

270

ranil

15 அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

மருதானையில் நேற்று நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சி நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,கடன் செலுத்த வேண்டிய காரணத்தினால்தான் வட் வரியை தொடர்ந்தும் அறவீடு செய்ய நேரிட்டது.

இந்த இளைஞர்களுக்கு எதிர்காலம் உண்டு இந்த இளைஞர் சமூகம் கடன் செலுத்த வேண்டியதில்லை.

அத்துடன், இந்த நாட்டு மக்களுக்கு நிவாரணங்களை வழங்க நாம் மற்றுமொரு தீர்மானத்தை எடுத்துள்ளோம்.

இன்னும் சில நாட்களில் 15 அத்தியாவசியப் பொருட்கள் நிவாரண விலையில் விற்பனை செய்யப்பட உள்ளது.

சீனி, பருப்பு, கிழங்கு, வெங்காயம், வெள்ளைப்பூண்டு, டின்மீன், பயறு, காய்ந்த மிளகாய், நெத்தலி உள்ளிட்ட பொருட்கள் இவ்வாறு நிவாரண விலையில் விற்பனை செய்யப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

SHARE