கோத்­த­பாயவிற்கு ஏற்பட்டது தவிற்க முடியாதாம்… ஊட­கப்­பேச்­சாளர் ஜெயநாத் ஜெய­வீர

238

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாயராஜ பக்ஷவிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த இரா­ணு­வப்­பா­து­காப்பு நீக்­கப்­பட்டு பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை பாது­காப்பு பேர­வையின் தீர்மா­ன­மே­யாகும். அதனை தடுக்க முடி­ யாது எனவும் பாது­காப்பு ஊட­கப்பேச்­சாளர் ஜெயநாத் ஜெய­வீர தெரி­வித்தார்.

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த 50 இரா­ணுவ வீரர்­களில் 25 இரா­ணு­வத்தை நீக்கி அதற்கு பதி­லாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்றுக் காலையில் இருந்து அமு­லுக்கு வரும் வரையில் தீமானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது.

இது தொடர்பில் பாது­காப்பு அமைச்­சிடம் வின­வி­ய­போதே பாது­காப்பு ஊட­கப்­பேச்­சாளர் ஜெயநாத் ஜெய­வீர மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறு­கையில்,

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு 50 இரா­ணுவம் பாது­காப்­பிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அதில் 25 பேரை குறைத்து அதற்குப் பதி­லாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையை நிய­மிப்­ப­தென தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த இரா­ணுவ பாது­காப்பை முற்று முழு­தாக நீக்­கு­வதா இல்­லையா என்­பது தொடர்பில் பாது­காப்பு சபையில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

எனினும் இப்­போது வரையில் வழங்­கப்­பட்­டி­ருக்கும் இரா­ணுவப் பாது­காப்பில் பாதி­ய­ளவில் குறைத்து அதற்கும் பதி­லாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டையை வழங்க பாது­காப்பு சபை தீர்­மானம் எடுத்­துள்­ளது.

இப்­போது நாட்டில் நிலவும் அமை­தி­யான சூழல் மற்றும் அச்­சு­றுத்தல் எவையும் இல்­லாத நிலை­மை­களை கவ­னத்தில் கொண்டு இந்த தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ளது. இந்த தீர்­மானம் பாது­காப்பு அமைச்சின் பாது­காப்பு சபையின் தீமா­ன­மே­யாகும். அதனை தடுக்க முடியாது. இதேபோல் இப்போது வழங்கப்பட்டுள்ள பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் நன்று பயிற்றுவிக்கப்பட்டவர்கள். அவர்களாலும் சரியான பாதுகாப்பை அவருக்கு வழங்க முடியும் என்றார்.

gota2

SHARE