வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி

269

625.117.560.350.160.300.053.800.210.160.90 (1)

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் மனுச நாணயக்கார தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் காலி மாவட்ட காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்,

வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை 40 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தில் பதிவிற்கு உட்படாமல் செல்லும் நபர்கள் தொடர்பிலான பொறுப்பினை எவருக்கும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

எனவே சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுச் செல்வதனை தவிர்த்துக் கொள்ள வேண்டும்

SHARE