மட்டக்களப்பின் ஹோட்டல் குளிர்பானத்தில் மயக்கமருந்து

238

எமது சகோதரிகளை நண்பிகளை பிள்ளைகளை தனியே எங்கேயும் அனுப்பிவைப்பதனை தவிர்க்கவும்.

மட்டக்களப்பின் ஹோட்டல் ஒன்றில் வெளிநாட்டு யுவதிகள் இருவருக்கு குளிர்பானத்தில் மயக்கமருந்து வழங்கப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவர்கள் அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர்களது கூற்றுப்படி மாலை 5 மணியளவில் அருந்திய குளிர்பானத்தின் பின்னர் அடுத்தநாள் காலை 9 மணி வரைக்கும் என்ன நிகழ்ந்ததென்பதனை அறியமுடியாமல் இருப்பதுடன் தாங்கள் அருந்திய குவளைகள் கீழே விழுந்து நொருங்காமல் பத்திரமாக மேசையில் வைக்கப்பட்டிருப்பதனையும் அவதானித்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவ்வாறெனின் அம்மயக்கமருந்தானது குடித்த அக்கணத்திலேயே செயற்படதொடங்கியுள்ளதனையும் குற்றவாளிகள் அவர்களிடமிருந்தே குவளைகளை தாங்கிபிடித்து செயற்பட்டுள்ளதனையும் ஊகிக்கமுடிகின்றது.

எனவே இவ்வாறான வேதிப்பொருட்கள் நமது நாட்டிற்குள்ளும் பிரதேசத்திற்குள்ளும் இலகுவாக வந்துவிட்டது என்பதே உண்மையாகும். எனவே எமது சகோதரிகளை நண்பிகளை பிள்ளைகளை தனியே எங்கேயும் அனுப்பிவைப்பதனை தவிர்க்கவும்.

அத்துடன் வெளியில் கிடைக்கும் உணவுகள் தண்ணீர் குளிர்பானங்கள் மிட்டாய்கள் என்பவற்றை சாப்பிடுவதனை உடனடியாக தடுத்து பாதுகாப்பான இடத்தினை அடைந்ததும் சாப்பிடுவதற்கும் குடிப்பதற்கும் அடுத்த சமுதாயத்திற்கு பழக்குவோம்.

இவ்வாறான வேதிப்பொருட்கள் போதைவஸ்து பொருட்களை வைத்திருப்பவர்கள் தொடர்பில் தகவல் கிடைத்தில் உடனே பொலிசிற்கு அறிவியுங்கள். யாரோ ஒருவர் ஆபத்தில் சிக்குவதிலிருந்து காப்பாற்றலாம்.batti

SHARE