ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுததாரிகளின் ஊடுருவல் தொடர்பில் உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த ஸ்ரீலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இந்திய ஊடகம் ஒன்றில் வெளியான செய்தியில் ஐ.எஸ். அமைப்பில் இணைந்து கொள்வதாக 3 இளைஞர்கள் ஸ்ரீலங்காவில் சமயக் கல்வி கற்பதற்காக செல்வதாக அவர்களின் உறவினர்களிடம் தெரிவித்து சென்றுள்ளனர் என்றும், கேரளாவிலிருந்தே இவர்கள் ஊடுருவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ் விடயம் தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீரவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்தபோதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
இவ் விடயம் தொடர்பில் விரிவாக எதனையும் கூறமுடியாது. அதேவேளை ஸ்ரீலங்கா உளவுப் பிரிவினர் உஷார்படுத்தப்பட்டுள்ள நிலையில் எதற்கும் அச்சமடையத் தேவையில்லை என்று கூறினார்.
இதேவேளை தெற்காசிய நாடான பங்களாதேஷ் தலைநகரான டாக்காவில் அண்மையில் ஐ.ஸ். அமைப்பு தாக்குதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.