ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்ல வேண்டியவர்களே!- பொன்சேகா காட்டம்

245

sarath-fonseka

அன்றைய மகாராஜாக்கள் இன்று சிறையில் இருக்கும் நாமலுக்கு உணவுகளை எடுத்துச்செல்வதாகஅமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அத்துடன் ராஜபக்ஸவின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சிறைக்கு செல்லவேண்டியவர்களே என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தான் 8 மாதங்கள் சிறையில் இருந்த போது சிறை உணவையே உண்டதாகவும், ஆனால்இன்று நாமல் ராஜபக்ஸவுக்கு வீட்டு உணவுகள் உண்பதற்குவாய்ப்பளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் கைதுகளுக்கு அரசியல் தலையீடுகள் காரணம்என்றும், இவை சட்டரீதியற்ற கைதுகள் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

அதில்எவ்வித உண்மையும் இல்லை என்று தெரிவித்துள்ள அவர், தன்னை கைது செய்தமை அடிப்படையற்றகுற்றசாட்டுகளை முன்வைத்து என்றும், ஆனால் தற்போது நடக்கும் கைதுகள்அனைத்தும் சட்டரீதியானவை என்றும் அமைச்சர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

SHARE