கொழும்பில் கடையடைப்பு

262

ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் வற் வரி அதிகரிப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று தலைநகர் கொழும்பின் புறக்கோட்டைப் பகுதியில் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்கள், கண்டனப் பேரணியொன்றிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த மே மாதம் இரண்டாம் திகதி முதல் வற் வரியை 11 வீதத்திலிருந்து 15 வீதமாக அதிகரித்த அரசாங்கத்தின் தீர்மானத்தை உச்ச நீதிமன்றம் இடை நிறுத்தி வைத்துள்ள நிலையிலேயே, அரசாங்கத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அதுவும் வற் வரி அதிகரிப்பால் பொது மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி புறக்கோட்டை ஆடை வியாபாரிகள் சங்கத்தினரால் இந்த கண்டனப் பேரணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.COLOMBO

SHARE