இவ்வருடம் புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவன் ஒருவன்
இனந்தெரியாதோரால் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று அட்டன் பிரதேசத்தில்
இடம்பெற்றுள்ளது.அட்டன் நகர பிரபல பாடசாலையொன்றை சேர்ந்த மாணவன் ஒருரே
இவ்வாறு கடத்தப்பட்டுள்ளார். இது தொடர்பாக தெரியவருவதாவது அட்டன் நகரில் 14-7-2016
2106 மாலை 5 மணியளவில் புலமைப்பரிசில் மேலதிக வகுப்புக்கு சென்று அட்டன்
டம்பார் வீதியில் வீட்டுக்கு சென்றுக்கொண்டிருந்த மாணவன் ஒருவன்
இனந்தெரியாதோரால் முச்சக்கரவண்டி ஒன்றில் கடத்தப்பட்டுள்ளார். குறித்த
சிறுவன் வீதியில் நடந்து சென்றுக்கொண்டிருந்தபோது முச்சக்கரவண்டியொன்றில்
சென்ற நபர்கள் சிறுவனை பலவந்தமாக தூக்கி கண்கள்வ்வா ய் பகுதி மற்றும் கைகளை
துணியினால் கட்டி கடத்திச் சென்றுள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட சிறுவனை தலவாக்கலை
நகருக்கு முன்பாக காணப்படும் தேயிலை தொழிற்ச்சாலை அருகாமையில் விட்டு
சென்றுள்ளனர்.குறித்த சிறுவன் கலக்கமடைந்த நிலையில் தலவாக்கலை புகையிரத
நிலையத்தை வந்தடைந்து தான் நானுஓயாவுக்கு செல்லவேண்டும் என புகையிரத
அதிகாரியிடம் கூறியுள்ளார். சிறுவனின் பதற்ற நிலையை உணர்ந்த புகையிரத
நிலைய அதிகாரி சிறுவனின் இருப்பிடத்தை அறிந்து நானுஓயா புகையிரத
நிலையத்திற்கு அறிவித்ததையடுத்து சிறுவனின் பெற்றோர் அன்றிரவு தலவாக்கலை
புகையிரத நிலையத்திற்கு வந்து சிறுவனுக்கு நடந்தவற்றை அறிந்து சிறுவனை
அழைத்துச் சென்று அட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றை பதிவு
செய்துள்ளனர். அன்றிரவே சிறுவன் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின் 15-7- 2016 காலை வீடு திரும்பியுள்ளார்.
குறித்த சிறுவன் நானுஓயா உடரதெல்ல பிரதேசத்தை சேர்ந்தவரெனவும் சிறுவன்
அட்டன் பிரதேசத்தில் இருக்கும் தனது உறவினர் வீட்டில் தங்கி கல்வி
கற்றுவருவதாகவும் பொலிஸ் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.