இந்தியாவில் ஐபிஎல் போட்டியை போன்றுமுதல்முறையாக புட்சால் கால்பந்து போட்டி நடத்தப்படுகிறது.
ஒரு அணியில் 3 சர்வதேச புட்சால் வீரர்களும், ஒரு நட்சத்திர கால்பந்து வீரரும், ஒரு இந்திய புட்சால் வீரரும் பங்கேற்பார்கள். மேலும், ஆட்டம் 40 நிமிடங்கள் நடைபெறும்.
இந்த போட்டிகள் இன்று (15/07/2016) தொடங்கி 24-ஆம் திகதி வரை சென்னை மற்றும் கோவாவில் நடைபெறுகின்றன.
இதில் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஏ பிரிவில் சென்னை, மும்பை, கொச்சி அணிகளும் பி பிரிவில் கோவா, கொல்கத்தா, பெங்களூர் அணிகள் என மொத்தம் 6 அணிகள் கலந்து கொள்கின்றன.
மேலும், ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள அணிகளுடன் 2 முறை லீக் ஆட்டத்தில் மோதி பின் அந்த பிரிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் 23-ஆம் திகதி நடைபெறும் அரையிறுதிக்கு தகுதி பெறும். இதில் வெற்றி பெறும் இரண்டு அணிகள் 24- ஆம் திகதி நடைபெறும் இறுதி போட்டிக்கு தகுதி பெறும்.
இந்த போட்டி இன்று இரவு 7 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் கோலாகலமாக தொடங்க உள்ளது. முதலில் சென்னை – மும்பை அணிகள் மோதுகின்றன.இதை தொடர்ந்து நடைபெறும் 2-ஆவது போட்டியில் கோவா-கொல்கத்தா அணிகள் சந்திக்க உள்ளன.