கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகளின் இளம் வீரரான அல்சாரி ஜோசப் பவுன்சர் பந்தால் அதிரடி ஆட்டக்காரர் டிவில்லியர்சை நிலைகுலைய வைத்தது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
கரீபியன் பிரிமியர் லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைவரும், உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரராக கருதப்படும் டிவில்லியர்ஸ் Barbados Tridents அணிக்காக ஆடி வருகிறார்.
இந்நிலையில் St Kitts and Nevis Patriots அணிக்கு எதிரான போட்டியில் டிவில்லியர்ஸ் அதிரடி காட்டிக் கொண்டிருந்தார்.
அப்போது St Kitts and Nevis Patriots அணிக்காக ஆடி வரும் மேற்கிந்திய தீவுகளின் 19 வயதே ஆன இளம் பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப் வீசிய பவுன்சர் பந்து டிவில்லியர்சின் ஹெல்மெட்டை பயங்கரமாக தாக்கியது.
இதில் அவர் ஒரு நிமிடம் ஆடிப் போய்விட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீண்ட அவர் மீண்டும் அதிரடி காட்டி 54 பந்தில் 82 ஓட்டங்கள் (8 பவுண்டரி, 3 சிக்சர்கள்) குவித்து அசத்தினார்.
இதனால் Barbados Tridents அணி 25 ஓட்டங்களால் St Kitts and Nevis Patriots அணியை வீழ்த்தி 2வது வெற்றி பெற்றது.
மேற்கிந்திய தீவுகளின் 19 வயதே ஆன இளம் பந்துவீச்சாளரான அல்சாரி ஜோசப், இந்த ஆண்டு நடந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்று அசத்தினார்.
இவரே மேற்கிந்திய தீவுகள் அணி சார்பில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவராகவும் இருந்தார். 6 போட்டிகளில் பங்கேற்று 13 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.