காலி-மாத்தறை பிரதான வீதியில், ஹபராதுவ பகுதியில் பஸ்ஸொன்றும் முச்சக்கரவண்டியும் மோதி விபத்துக்குள்ளாகியதில் மூவர் பலியாகியுள்ளதோடு ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று அதிகாலையில் இடம்பெற்ற குறித்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரு சகோதர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் பலியாகியவர்கள் காலி பிரதேசத்தை சேர்ந்த 25 மற்றும் 27 வயதுடையவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது.
மேலும்,குறித்த விபத்தில் பலியாகிய இருவரும் சுற்றூலா பயணிகளுக்கு வழிகாட்டிகளாக செயற்படுபவர்கள் என பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.