நாமல் ராஜபக்ச நீதிமன்றில் முன்னிலை

241

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கொழும்பு புறக்கோட்டை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.

நிதிமோசடி குற்றச்சாட்டில் கடந்த 11 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மூத்த புதல்வரான நாமல் ராஜபக்ச விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்டுள்ளார்.

70 மில்லியன் பொது நிதி மோசடி தொடர்பில் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இன்று நீதிமன்றத்தில் நாமலுக்கான பிணை மனு முன்வைக்கப்படவுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.namail

namail01

முதலாம் இணைப்பு

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி திங்கட்கிழமை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் நாமல் ராஜபக்ச கைதுசெய்யப்பட்டார்.

70 மில்லியன் பொது நிதி மோசடி தொடர்பில் அவர் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டார். இந்தநிலையில் இன்று நீதிமன்றத்தில் நாமலுக்கான பிணை மனு முன்வைக்கப்படவுள்ளதாக அவரது சட்டத்தரணி குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 11 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலைப்படுத்தபட்ட நிலையில் கொழும்பு கோட்டை பிரதான நீதவான் லங்கா டி ஜயசிங்க நாமல் ராஜபக்சவை எதிர்வரும் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE