சிம்புவின் திருமணம் எப்போது என்பதற்கு டி.ராஜேந்தர் புதிய பதிலளித்துள்ளார். அதுகுறித்த செய்திகளை கீழே பார்ப்போம்…
இரண்டு காதல் தோல்விகளுக்கு பிறகு சிம்பு தற்போது பெற்றோருக்கு விருப்பமான பெண்ணை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்துள்ளார். தன்னுடைய விருப்பத்தை பெற்றோரிடமும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிம்புவுக்கு பெண் தேடும் படலத்தை தீவிரமாக ஆரம்பித்துள்ளனர் சிம்புவின் பெற்றோர்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் சிம்புவின் அப்பாவும், பிரபல இயக்குனர் மற்றும் நடிகருமான டி.ராஜேந்தர், சிம்புவின் திருமணம் எப்போது? என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறும்போது, சிம்புவை திருமணம் செய்துகொள்ள ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அவர்களில் மனப்பொருத்தம், ஜாதகப் பொருத்தத்துடன் கூடிய பெண்ணைத் தேடி வருகிறோம். இருப்பினும், சிம்புவின் திருமணம் காதல் திருமணமாகக்கூட இருக்கலாம் என்று கூறினார்.
சிம்பு நடிப்பில் தற்போது ‘அச்சம் என்பது மடமையடா’ படம் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இதையடுத்து, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படங்கள் முடிந்தபிறகு சிம்புவின் திருமணம் குறித்த செய்திகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.