அமெரிக்க சச்சிதானந்தா கோவிலில் மகளுடன் ரஜினி

279

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிபாடு செய்துள்ளார்.

ரஜினியின் கபாலி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், அவர் அமெரிக்காவிலுள்ள மருத்துவமனையில் உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என வதந்திகள் பரவின.

இந்த நிலையில் ரஜினி தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்காவின் வெர்ஜினியா நகரிலுள்ள சச்சிதானந்தா கோவிலில் வழிப்பாடு நடத்தியுள்ளார்.

இதுதொடர்பான புகைப்படத்தை ஐஸ்வர்யா தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கபாலி திரைப்படம் எதிர்வரும் 22ஆம் திகதி வெளியாவதால், அதற்கு முன்பாகவே ரஜினி நாடு திரும்புவார் என்று கபாலி பட இயக்குநர் ரஞ்சித் நிகழ்ச்சி ஒன்றில் கூறியிருந்தார். எனவே ஓரிரு நாட்களில் ரஜினி சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.rajani01

rajani02

rajne

SHARE