அம்பாறை மரதன் போட்டியில் ஜேர்மனிய வீரர் முதலிடம்

293

அம்பாறை பொத்­துவில் அறு­கம்பை அபி­வி­ருத்தி ஒன்­றியம் ஏற்­பாடு செய்த 21.5 கிலோ மீற்றர் தூரம் கொண்ட அரை மரதன் ஓட்­டப் ­போட்­டியில் ஜேர்மன் பிர­ஜை­யான மாகஸ் கோடர் முதலாம் இடத்தை பெற்றார்.

பொத்­துவில் அறு­கம்பை அபி­வி­ருத்தி ஒன்­றியம் ஏற்­பாடு செய்த “கல்­விக்­காக ஓடுவோம்” அரை மரதன் ஓட்­டப்­போட்டி நேற்று காலை பொத்­துவில் சின்ன உல்லை அல் அக்ஸா வித்­தி­யா­ல­யத்­துக்கு முன்னால் ஆரம்­ப­மா­கி­யது.

இப்­போட்­டியில் ஜேர்­ம­னி­ய­ரான மாகஸ் கோடர் எக்படர் முத­லி­டத்தைப் பெற்று 30 ஆயிரம் ரூபா பணப்­ப­ரி­சைப் பெற்­றுக் ­கொண்டார்.

பொத்­துவில் கோமாரி இரா­ணுவ முகாமில் கட­மை­யாற்றும் இரா­ணுவ வீரர் பியல் திசா­நா­யக்க இரண்­டா­மி­டத்தைப் பெற்று 20 ஆயிரம் பணப்­ப­ரிசைப் பெற்றுக் கொண்டார்.

பொத்­துவில் தாண்­டி­ய­டியைச் சேர்ந்த கே.சிறி­தரன் 3 ஆம் இடத்தை அடைந்து 15 ஆயிரம் ரூபா பணப் ­ப­ரிசை பெற்­றுக் ­கொண்டார்.

இப்­போட்­டியின் ஆரம்ப நிகழ்வில் சிறப்பு அதி­தி­க­ளாக கலந்து கொண்ட இலங்கை கிரிக்கெட் வீரர்­க­ளான தம்­மிக்க பிரசாத், தனுஷ்க குண­தி­லக்க, பினுர பெர்­ணாண்டோ ஆகியோர் வெற்றி பெற்ற மூவ­ருக்கும் பரி­சில்­களை வழங்­கினர்.

இதேவேளை மாண­வர்­க­ளுக்­கான 5 கிலோ­மீற்றர் ஓட்டப் போட்­டியில் எம்.ஏ.எச்.நுஸ்கி அஹமட் 1 ஆம் இடத்­தையும், எம்.எஸ்.சஜான் இரண்டாம் இடத்­தையும், ஹசான் 3 ஆம் இடத்­தையும் பெற்றுக் கொண்­டனர். இப்­போட்­டியில் 57 பேர் கலந்து கொண்டர். இவர்­களில் 28 பேர் முழுத் தூரத்­தையும் ஓடி முடித்து ஆறுதல் பரி­சில்­களை பெற்றுக் கொண்­டனர்.

இந்­நி­கழ்வில் பொத்­துவில் பிர­தேச செய­லாளர் என்.எம்.முஹர்ரத், பொத்­து வில் வைத்­தி­ய­சா­லையின் வைத்­திய அத்­தி­யட்­சகர் ரி.எல்.மனாப், பொத்­துவில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.இஸ்ஸடீன், அறுகம்பை அபிவிருத்தி ஒன்றிய உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.maratnmaratn01maratn02maratn03maratn04maratn05

SHARE