மீண்டும் வவுனியாவில் தொடங்கியது ஊடக அடக்குமுறை நல்லாட்சி அரசின் செயல்பாட்டில் கேள்விக்குறி வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பா.உ காட்டம்

342

 

Inline image 1
தினப்புயல் பத்திரிகையின் வியாபார முகவர்களாகிய வவுனியா நகர பத்திரிகை விற்பனை நிலையங்களில் திடீரென அடையாளம் தெரியாத புலனாய்வு உத்தியோகத்தர்கள் என்ற போர்வையில் மிரட்டல்கள் செய்யப்பட்டுள்ளது. பதிவு செய்யப்பட்ட ஒரு ஊடக நிறுவனத்தின் மேல் மறைமுக ஊடக அடக்கு முறையாகவே மேற்படி விடயம் பார்க்கப்பட முடியும்.
ஊடக சட்டங்களுக்கு புறம்பாக செயல்பட்டால் நீதிமன்ற நடைமுறைகளை கடைப்பிடிப்பதே ஐனநாயகம். பிரபாகரனின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றியே நாடுகடந்த அரசாங்கத்திற்கான அங்கிகாரம் என்ற தினப்புயல் பத்திரிகையில் வந்த செய்தியே மேற்படி ஊடக அடக்குமுறை முயற்சிக்கு காரணம் என தெரியவருகிறது.
எது எப்படியாயினும் சட்டத்திற்கு புறம்பான ஊடக அடக்குமுறையை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் கூறினார்.

SHARE