அனுஷ்கா தனது உடல் எடையைக் குறைக்காமல் இருப்பது ராஜமௌலிக்கு கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறதாம்.
இதனால் அனுஷ்காவை அவர் எச்சரித்ததாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
‘பாகுபலி’ படத்தைத் தொடர்ந்து ‘பாகுபலி 2’ வை ராஜமௌலி தற்போது இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
முதல் பாகத்தில் வயதான தோற்றத்தில் நடித்த அனுஷ்காவிற்கு இதில் பிரபாஸுடனான காதல் காட்சிகள் அதிகம் இருக்கிறதாம்.
இதற்காக அனுஷ்கா தனது உடல் எடையைக் குறைத்து வருகிறார். ஆனால் ‘இஞ்சி இடுப்பழகி’ படத்திற்காக மொத்தமாக ஏற்றிய உடல் எடையை உடனடியாகக் குறைக்க அனுஷ்காவால் முடியவில்லை.
இதனால் கோபமடைந்த ராஜமௌலி உடல் எடையை விரைவாகக் குறைக்குமாறு அனுஷ்காவைக் கடிந்து கொண்டாராம்.
தேவசேனா என்னும் அனுஷ்காவின் வேடம் படத்தில் முக்கிய பங்கு வகிப்பது தான், ராஜமௌலியின் கோபத்திற்குக் காரணம் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிகின்றன.
இதனால் அறுவைசிகிச்சை செய்து எடையைக் குறைக்கலாமா? என அனுஷ்கா தற்போது தீவிரமாக சிந்தித்து வருகிறாராம்.