சம்பூர் மின்னுற்பத்தி நிலையம் கைவிடப்பட்டது?

214

சம்பூரில் மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்கும் வேலைத்திட்டத்தை இந்தியா கைவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இந்த வேலைத்திட்டத்துக்கு வெளியாக்கப்பட்ட எதிர்ப்புகள் மற்றும் சிறிலங்கா அரசாங்கத்தின் மாற்றுத்திட்ட கோரிக்கை என்பவற்றின் அடிப்படையில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய ஊடகம் ஒன்றின் தகவல் படி, இந்தியாவினால் கொழும்புக்கு அருகில் உள்ள கெரவலபிட்டிய பகுதியில் இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையம் ஒன்று அமைக்கப்படவுள்ளது.

சம்பூர் நிலக்கரி மின்னுற்பத்தி நிலையத்துக்கு பதிலாக இயற்கை எரிவாயு மின்னுற்பத்தி நிலையத்தை அமைக்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டிருந்த போது, பிரதமர் நரேந்திர மோடிக்கு அறிவுறுத்தி இருந்தார்.

இதன்படி இந்தியா இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.sampur

SHARE