எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதியிலிருந்து, இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளுக்கான கட்டணங்களை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, போக்குவரத்து பிரதி அமைச்சர் அஷோக அபேசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி நூற்றுக்கு 6 வீதத்தினால் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதற்கமைய ஆரம்ப பேரூந்து கட்டணமான 8 ரூபா 9ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யவும், இந்த துறையினை நட்டத்திலிருந்து காப்பாற்றவுமே இவ்வாறு, பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
கண்டி – குண்டசாலை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே பிரதியமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.