தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் 89ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு
வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான
பேச்சுப் போட்டி – 2016.
போட்டி நிபந்தனைகள்
கீழ்ப்பிரிவு – தரம் 6, 7, 8 (3 நிமிடங்கள்)
1. தமிழர் தாயகத்தின் தங்கத் தலைவன்
2. மன்னுயிர் வாழ தன்னுயிர் தந்த தலைவன்
3. அமிர்தலிங்கம் அமிழ்தினும் இனியவன்
மத்தியபிரிவு – தரம் 9, 10, 11 (5 நிமிடங்கள்)
1. தந்தை செல்வாவின் ஆணையின் தளபதி அமிர்தலிங்கம்
2. ஈழத் தமிழரின் இனிய காவலன் அண்ணல் அமிர்தலிங்கம்
3. தமிழரசுக் கட்சியின் தங்கத் தலைவன்
மேற்பிரிவு – தரம் 12, 13 (7 நிமிடங்கள்)
1. வட்டுக்கோட்டைத் தீர்மானம் வாழ உயிர் தந்த அண்ணல்
2. வடக்கு கிழக்கு வாழ வழிகாட்டித் தந்தவன்
3. எதிர்க்கட்சித் தலைவனுக்கு இலக்கணம் ஆனவன்
விரும்பிய தலைப்பில் ஏதேனும் ஒன்றை தெரிவு செய்து குறித்த நேரத்துள் பேச வேண்டும்.
முன்கூட்டியே தயார்படுத்தி மனனம் செய்து சுயமாகப் பேசவேண்டும்.
பாடசாலை சீருடையுடன் பங்குபற்ற வேண்டும்.
பங்குபற்ற விரும்புவோர் முழுப்பெயர், வகுப்பு, பிறந்ததிகதி, தொலைபேசி இல. என்பவற்றைத் தெளிவாக எழுதி பாடசாலை அதிபர் ஊடாக 10.08.2016க்கு முன் கிடைக்கக்கூடியதாக தபாலில் அனுப்பி வைக்கவும் முகவரி – போட்டி ஏற்பாட்டாளர், அமிர்தலிங்கம் நினைவு அறக் கட்டளை, மூளாய், சுழிபுரம்.
போட்டியில் மத்தியஸ்தர்களின் தீர்ப்பே இறுதியானதாகும். வடக்கு மாகாண பாடசாலையில் கல்விகற்கும் எவரும் விண்ணப்பிக்கலாம். போட்டிகள் 21.08.2016 ஞாயிறு காலை 9.00 மணிக்கு நடைபெறும். இடம் பின்னர் அறிவிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலும் வெற்றியீட்டும் முதல் 3 போட்டியாளர்களுக்கும் தங்கப்பதக்கமும், பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும்.