அமெரிக்காவைச் சேர்ந்த யுவதியொருவர் 3 தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்துள்ளார். இந்த 6 குழந்தைகளும் 26 மாத கால இடைவெளியில் பிறந்தமை குறிப்பிடத்தக்கது.
கான்சாஸ் நகரைச் சேர்ந்த 20 வயதான டனேஷா கோச் எனும் யுவதியே இவ்வாறு தடவைகள் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார். இவர் தனது காதலரான ஜெப்ரி பிரெஸ்லருடன் இணைந்து வாழ்ந்து வருகிறார்.
இத் தம்பதியினர் 26 மாதங்களுக்கு முன் முதல் தடவையாக பெற்றோ ராகினர். அப்போது இவர்களுக்கு இரு ஆண் குழந்தைகள் பிறந்தன. பின்னர் அவற்றில் ஒரு குழந்தை இறந்துவிட்டது.
14 மாதங்களில் இவர்களுக்கு மீண்டும் இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. இவை இரண்டும் பெண் குழந்தைகளாகும். பின்னர் மீண்டும் டனேஷா கர்ப்பிணியானார்.
கடந்த மாதம் அவர் மூன்றாவது தடவையாக இரட்டைக் குழந்தைகளைப் பிரசவித்தார். இவையும் பெண் குழந்தைகளாகும்.
எவ்வித செயற்கை கருத்தரிப்பு முறைமையையும் தாம் பின்பற்றவில்லை என இத் தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இவர்கள் முறைப்படி திருமணம் செய்து கொள்வதற்குத் திட்டமிட்டுள்ளனர். எனினும் இன்னும் 10 வருடங்களுக்கு மேலும் குழந்தைகளைப் பெறும் எண்ணம் தனக்கில்லை என்கிறார் டனேஷா.