அவசரமாக மைதானத்தை விட்டு வெளியேறிய டோனி: எதற்காக தெரியுமா?

279

625.400.560.350.160.300.053.800.748.160.70

கிரிக்கெட் போட்டிகளின் இடையில் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேறவோ, மைதானத்திற்குள் அனுமதிக்கப்படவோ மாட்டார்கள்.

ஆனால் அவர்களுக்கும் அவசரமாக வந்தால் என்ன செய்ய முடியும்? வெளியே சென்று தானே ஆக வேண்டும்.

இது போன்று வீரர்கள் அவசரமாக சிறுநீர் கழிக்க பாதியில் வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர் வழங்கப்பட மாட்டாது. இது போன்ற நிலைமை பல வீரர்களுக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆசியக் கிண்ண தொடரில் வங்கதேச தேச அணிக்கு எதிராக கீப்பிங் செய்து கொண்டிருக்கும் போது 44வது ஓவரில் டோனி திடீரென மைதானத்தில் இருந்து ஓடிவிட்டார். அவர் வெளியே சிறுநீர் கழிக்க சென்றுவிட்டார்.

இதன் போது கோஹ்லி கீப்பிங் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். பின்னர் மீண்டும் 45வது ஓவரில் டோனி மீண்டும் மைதானத்திற்குள் வந்து கீப்பிங் பணியை செய்தார்.

இது போன்ற அனுபவம் முன்னாள் வீரர் கங்குலிக்கும் நிகழ்ந்துள்ளது. சிட்னி டெஸ்டின் போது அவர் இப்படி தான் அவசரமாக வெளியேறி விட்டார்.

அதே போல் ஹர்பஜன் சிங் ராஞ்சிப் போட்டியில் ஆடும் போதும், மேற்கிந்திய தீவுகள் வீரர் மார்வின் டில்லோன் இந்தியாவுடனான டெஸ்டின் போதும் அவதிப்பட்டுள்ளனர்.

ஆடுகள நடுவர் கூட சிறுநீர் கழிக்க பாதியில் வெளியேறி இருக்கிறார். இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது பிரிட்டிஷ் நடுவர் டிக்கி பேர்ட், பந்துவீசிக் கொண்டிருந்த இயன் போத்தமிடம் அனுமதி பெற்றுவிட்டு அவசரமாக சிறுநீர் கழித்து விட்டு வந்தார்.

தனது பேண்ட் ஜிப்பை கூட போடாமல் அவசரமாக வந்தாக அந்த நிகழ்வை நினைவுபடுத்தினார் 83 வயதான டிக்கி பேர்ட்.

SHARE