300 ஆவணங்களை ஆசனத்தின் கீழ் பகுதியில் வைத்திருந்த சாரதி கைது

688
 

300 ற்கும் அதிகமான ஆவணங்களுடன் கம்பளை மரியவத்த பிரதேசத்தில் வைத்து சாரதியொருவரை இன்று செவ்வாய்கிழமை (08) கைது செய்ததாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது குறித்த சாரதி தன்வசம் வைத்திருந்த பிறப்பு சான்றிதழ்கள், மரண சான்றிதழ்கள், வாகன புகை பரிசோதனை சான்றிதழ்கள், தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் உள்ளடங்களாக 300 ற்கும் அதிகமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஆசனத்தின் கீழ் பகுதியில் 100 ற்கும் அதிகமான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததுடன் குறித்த ஆவணங்கள் கொழும்பில் இருந்து அனுப்பப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறினர்.

SHARE