தப்பிச் சென்ற கைதிகளை பிடிக்க பொதுமக்களின் உதவியை கோரும் சுவிஸ் பொலிஸார்!

300

625.117.560.350.160.300.053.800.210.160.90

சுவிற்சர்லாந்தின் பாடென் சிறையில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை தப்பிச் சென்ற இரண்டு கைதிகளை பிடிக்க Aargau பிராந்திய பொலிஸார் பொது மக்களின் உதவியை கோரியுள்ளனர்.

செவ்வாய்க்கிழமை அதிகாலை மூன்று மணியவில் இரண்டு கைதிகள் சிறையில் இருந்து காணாமல் போயுள்ளதை சிறை நிர்வாகத்தினர் கண்டறிந்துள்ளதாக பொலிஸாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் மோப்ப நாய்கள் மற்றும் இராணுவ ஹெலிக்கெப்டர்களை அழைத்து பொலிஸார் தேடுதல் நடத்திய போதிலும் தப்பிச் சென்ற கைதிகள் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த இரண்டு கைதிகளும் சொத்து தொடர்பான குற்றங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

ரோமானிய பிரஜைகளான 39 வயதான Fechete Gheorghe மற்றும் 33 வயதான Rostas Crisan ஆகிய கைதிகளை இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.

இவர்கள் பற்றிய தகவல்களை அறிந்தால், Aargau பிராந்திய பொலிஸ் நிலையத்தை 117 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

SHARE