வவுனியாவில் வீடுகளில் தங்க நகைகளை கொள்ளையிட்டு வந்த இளம் தம்பதியினரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த தம்பதிகள் வவுனியாவிலுள்ள இரண்டு மாடி வீடு ஒன்றில் மூன்று சந்தர்ப்பங்களில் 5 இலட்சத்துக்கு அதிகமான தங்க நகைகளை கொள்ளையிட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்களால் கொள்ளையிடப்படும் தங்க நகைகள் அடகு வைக்கப்பட்டு பணமாக பெறுவதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை 21 வயதான குறித்த தம்பதி வவுனியா சிதம்பரபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களை இன்று வவுனியா நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது
அனுராதபுரம் மதவாச்சி பகுதியில் கேரளா கஞ்சா வைத்திருந்த நபர் ஒருவரை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று காலை கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேகநபரிடம் இருந்து 10 கிலோகிராம் கேரளா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் ஊடகப் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபரை இன்று அனுராதபுரம் நீதிமன்றத்தின் முன்னிலையில் ஆஜர்படுத்த இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.